குழந்தை நட்சத்திரத்தில் கலக்கிய சிறுவன் இரத்த புற்றுநோயால் உயிரிழப்பு; கண்ணீரில் குடும்பத்தினர், படக்குழு.!



chhello-show-rahul-koli-passed-away-blood-cancer

Tribeca Film Festival ஒளிபரப்பப்பட்ட குஜராத்தி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால்.உயிரிழந்தார்.

குஜராத்தி இயக்குனர் பான் நீலன் இயக்கத்தில், நடிகர்கள் பாவின் ரபாரி, பாவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா, தீபன் ராவல் உட்பட பலர் நடித்து அக். 14ம் தேதி திரையில் வெளியாகவுள்ள திரைப்படம் செல்லோ ஷோ (Chhello Show). கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் Tribeca Film Festival-ல் ஒளிபரப்பப்பட்டது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ராகுல் கோலி (வயது 10) என்ற சிறுவன், இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளான். இவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

Chhello Show

அவரின் மறைவு படக்குழுவிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படத்தின் ரிலீசுக்காக படக்குழு மற்றும் குழந்தை நட்சத்திரமான ராகுலின் பெற்றோர் காத்திருந்த வேளையில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. செலோ ஷோ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சிறுவன் ராகுல் கோலியின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் ஆகும். அவரின் தந்தை ரிக்ஷம் ஓட்டுநர். இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் தங்களின் வாழ்க்கை மாறும் என்று அனைவரும் காத்திருந்த வேளையில், சிறுவனின் மரணம் நிகழ்ந்துள்ளது. புற்றுநோய் கொடியது.