மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கிளிமஞ்சாரோ பாடலை ஆப்பிரிக்க பழங்குடியினருடன் பாடிய சின்மயி!" வீடியோ வைரல்!
பிரபல பின்னணிப் பாடகியான சின்மயி, ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் இடம்பெற்ற "ஒரு தெய்வம் தந்த சின்ன பூவே" பாடலின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். மேலும் தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார் சின்மயி.
பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல், நடிகைகளுக்கு பின்னணிக் குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் உள்ளார் சின்மயி. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் "எந்திரன்".
இப்படத்தில் இடம்பெற்ற "கிளிமஞ்சாரோ" என்ற பாடலையும் சின்மயி தான் பாடியிருந்தார். பழங்குடியினரின் நடனத்தை பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடல் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. 2010ம் ஆண்டு வெளியான இப்பாடலை தற்போது மீண்டும் சின்மயி ரீகிரியேட் செய்துள்ளார்.
தற்போது சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் ஆப்பிரிக்காவின் மாசாய் பழங்குடியின மக்களுடன் இணைந்து "கிளிமஞ்சாரோ' பாடலை பாடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.