மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேவையில்லாத குழப்பம்.! ப்ளீஸ் முட்டாள்தனமா எழுதாதீங்க.! கடுப்பான நடிகர் சிரஞ்சீவி.! ஏன்??
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி தற்போது வேதாளம் படத்தின் தமிழ் ரீமேக்கான 'போலா ஷங்கர்' படத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி புற்றுநோயால் பாதிக்கபட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த சிரஞ்சீவி கூறுகையில், அண்மையில் புற்றுநோய் மையத்தை திறந்து வைக்கும்போது விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என கூறினேன். நான் எச்சரிக்கையாக பெருங்குடல் ஸ்கோப் சோதனை மேற்கொண்டதால் புற்றுநோய் அல்லாத பாலிப்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. பரிசோதனை செய்யாமல் இருந்திருந்தால், அது புற்றுநோயாக மாறியிருக்கும் என்று கூறியிருந்தேன்.
அதனால்தான் அனைவரும் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். ஆனால் சில ஊடகங்கள் அதனை சரியாகப் புரிந்து கொள்ளாமல் எனக்கு புற்றுநோய் வந்துவிட்டதாக தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். பொருள் புரியாமல் முட்டாள்தனமாக எதையும் எழுதாதீர்கள் என கூறியுள்ளார்.