அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
வடிவேலுவுக்கு ஜோடியாகும் 90ஸ் சினிமா நடிகை.. வெளியான அசத்தல் தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. இவருடைய கடைசியாக வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த திரைப்படத்துக்கு பிறகு தற்போது பகத் பாஸில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது 98வது திரைப்படமாக தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிகை சித்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக நடிக்காமல் இருந்த இவருக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.