மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாடி இல்லனாலும் தாறுமாறு ஸ்டைல்.. சியான் விக்ரமின் கூலான போட்டோஸ் வைரல்.! அடுத்த படத்துக்கு ரெடி.!!
கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக இருந்து வரும் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் எந்த விதமான முன் அனுபவமும் இன்றி தமிழ் திரையுலகுக்குள் நுழைந்து தனது உழைப்பினால் படிப்படியாக முன்னேறினார்.
விக்ரம் நடிப்பில் வெளியான சேது, பிதாமகன், அன்னியன், ஐ, காசி போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை அளித்திருக்கின்றன. இதில் 'சேது' திரைப்படம் தான் இவரின் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கேஜிஎபில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படத்தில் மாளவிகா மோகனன், டேனியல், பார்வதி உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் தங்கலான் திரைப்படத்திற்காக இத்தனை நாள் வைத்திருந்த கெட்டப்பை முழுவதுமாக மாற்றி தற்போது கூலான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள், அடுத்த படத்திற்கு தயாராகிட்டீங்க போலயே நாங்க ரெடி என்று கூறி வருகின்றனர்.