மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஆண்கள் மட்டுமல்ல., பெண்களாலும் எல்லாமே செய்ய முடியும்" - சீரியல் நடிகை பளீச் பேட்டி..!!
கலர்ஸ் தமிழில் பெண் உரிமையை எடுத்துரைத்து கௌரவிக்கும் வகையில் ஜமீலா மற்றும் உள்ளத்தை அளித்த ஆகிய புதிய நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் ஜமீலா தொடர் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கும், உள்ளத்தை அள்ளித்தா தொடர் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதுகுறித்து நடிகை தன்வி ராவ் கூறுகையில், "ஜமீலா தொடரில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பல தடைகள் இருந்தபோதிலும் எனது லட்சியத்தை அடையத்துடிக்கும் பெண்ணாக இதில் நடித்திருக்கிறேன். இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் தொடராக அமையும்" என்று தெரிவித்திருந்தார்.
உள்ளத்தை அள்ளித்தா நடிகை வைஷ்ணவி கூறுகையில், "ஆண்கள் மட்டும் தன்குடும்பத்திற்காக சம்பாதிக்க முடியும் மற்றும் தன் குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியும் என்ற கொள்கையை மாற்றி, பெண்களாலும் அனைத்தையும் செய்ய முடியும் என்பதை வற்புறுத்தும் வகையில் இந்த தொடர் உள்ளது. இனிவரும் நாட்களில் நம் பார்வையாளர்களை கவரும் வகையில் என் அன்பான பயணம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.