"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு அஜித் தான் காரணம்.. உண்மையை போட்டு உடைத்த காமெடி நடிகர்.!

1998ம் ஆண்டு "மறுமலர்ச்சி" படத்தில் தேநீரை விற்பவராக ஒரு அங்கீகரிக்கப்படாத கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் அப்புக்குட்டி. இதையடுத்து சொல்ல மறந்த கதை, கில்லி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களிலும் ஒரு சிறிய கவனம் பெறாத கேரக்டரில் நடித்துள்ளார்.
2009ம் ஆண்டு "வெண்ணிலா கபடிக்குழு" படத்தில் தான் இவரது நடிப்பு கவனிக்கப்பட்டது. இதையடுத்து பல படங்களில் காமெடி துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள அப்புக்குட்டி, அஜித்துடன் "வீரம்" படத்திலும் நடித்துள்ளார். அந்த சமயத்தில் அப்புக்குட்டி தன்னுடைய காட்சி வரும்போது வந்து நடிப்பாராம்.
மற்ற சமயத்தில் தனியாக சென்று அமர்ந்து விடுவாராம். இதைக் கண்ட அஜித் அப்புக்குட்டியிடம் "ஏன் தனியாக சென்று அமர்ந்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அப்போது அப்புக்குட்டி அஜித்திடம் தனக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையைக் கூறியிருக்கிறார்.
அதைக் கேட்ட அஜித், தான் ஆரம்பகாலங்களில் சினிமாவில் பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் அப்புக்குட்டியிடம் எடுத்துக்கூறி அவருக்கு தைரியமூட்டியுள்ளார். இதையடுத்து இனிமேல் தினமும் தன் அருகில் தான் அமரவேண்டும் என்றும் அஜித் கூறியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.