மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி நடிகர் செந்தில் மேடையில் கேட்ட கேள்வியால் அவமானபட்ட விஷால்..
70-80களில் கவுண்டமணி, செந்தில் என்றால் தெரியாதவர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு இந்த ஜோடி காமெடியில் பட்டையைக் கிளப்பியது அந்தக்காலம். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இருக்கிறார்கள் என்றாலே அந்தப் படம் வெற்றி உறுதியாகிவிடும்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67ஆவது பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அக் கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதில் புதிய நடிகர் சங்க கட்டடம் கட்ட 40கோடி ரூபாய் கடன் பெற நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் உறுப்பினர்களிடம் ஒப்புதல் கோரினார். ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட செந்தில், "கோடி கோடியாக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் ஒரு பத்து பேர் தங்கள் பணத்திலிருந்து ஆளுக்கு கொஞ்சம் கொடுத்தாலே 40கோடி வந்துவிடும். இதற்கு கடன் ஏன் வாங்க வேண்டும்?" என்று நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.