மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா... அழகிய புகைப்படம் இதோ.!
தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் அனைத்தும் அவ்வளவாக பிரபலமாகவில்லை.
பின் ஸ்ருதிகா திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் செட்டில் ஆனார்.இந்நிலையில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் விதமாக பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குத் வித் கோமாளி சீசன் 3 யில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
இதற்கு முந்தைய சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் பல பேர் தற்போது வெள்ளி திரையில் பிரபலமாகி வரும் நிலையில் ஸ்ருதிகாவும் பிரபலமாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது ஸ்ருதிகாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஸ்ருதிகா தனது கணவர் அர்ஜுன் மற்றும் மகனுடன் உள்ளார்.