"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி சுனிதா நடித்த படத்தின் சர்ச்சையான போஸ்டர்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.?
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருவது குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி பல சீசன்களைத்தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சுனிதா, இவர் குக் விட் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோமாளிகளில் ஒருவராக இருந்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் இதற்கு முன்பாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகவே பிரபலம் அடைந்தார்.
மேலும் சுனிதா சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நடன நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர்.
இது போன்ற நிலையில், சுனிதா தற்போது 'FLKKA' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் சுனிதா ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கிறார். போஸ்டரை பார்த்த ரசிகர்கள் "சுனிதா லெஸ்பியனா நடித்திருக்கிறார்களா" என்று அதிர்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.