மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ இது வையாபுரியா! கிண்டல் செய்தவர்களுக்கு செம கூலாக பதிலடி கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்!
தமிழ் சினிமாவில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லகன்னு என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் வையாபுரி. அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக பிரபலமானார்.
மேலும் நடிகர் வையாபுரி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய செய்தது.
Naan Avan Illai 😛
— DK (@DineshKarthik) January 2, 2021
Never knew Vaiyapuri was my doppelgänger all my life https://t.co/N4SDLZxSzH
இந்த நிலையில் சமீபத்தில் வையாபுரி கோட்சூட், கண்ணாடி என மிகவும் ஸ்டைலாக வித்தியாசமான போட்டோஷூட் நடத்தியிருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் போல இருப்பதாக கிண்டல் செய்து வந்துள்ளனர். மேலும் மீம்களும் வைரலானது. இந்த நிலையில் அதனை கண்ட தினேஷ் கார்த்திக் மிகவும் கூலாக, நான் அவன் இல்லை, வையாபுரி என்னுடைய டூப் என்பது இதுவரை எனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.