#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலை இயக்கப்போகும் தனுஷ்..
சன்டிவியில் காலை முதல் மாலை வரை பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை குறிப்பாக பெண்களைக் கவர்ந்து வருகின்றன. வருடக் கணக்காக ஒளிபரப்பாகும் தொடர்களும், அவ்வப்போது புதுப் புது தொடர்களும் தொடர்ந்து எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்நிலையில், தற்போது சன்டிவியின் சமூக வலைத்தளத்தில், ஒரு புதிய தொடருக்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. "சிங்கப்பெண்ணே" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை, தனுஷ் என்பவர் இயக்கப்போவதாகத் தெரிகிறது.
தனுஷ், ஏற்கனவே சன்டிவியில் ஒளிபரப்பான "கண்ணான கண்ணே" வெற்றித் தொடரை இயக்கியிருந்தார். கண்ணான கண்ணே தொடர் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த தொடர் ஒளிபரப்பான ப்ரைம் டைமிலேயே, "சிங்கப்பெண்ணே" தொடரும் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பெண்ணே தொடரில் மனீஷா மகேஷ் கிராமத்தில் சுட்டித்தனம் செய்யும் குறும்புக்கார பெண்ணாக நடித்துள்ளார். இந்தத் தொடர் ஒளிபரப்பாகப் போகும் தேதி மற்றும் நேரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த தொடரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.