பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கேரளத்து பெண்குட்டியாக மாறிய தர்ஷா குப்தா.. இணையத்தில் தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படம்.!
சின்னத்திரையில் தொலைக்காட்சி சீரியல்களின் மூலம் பிரபலமாக இருந்து வந்தவர் தர்ஷா குப்தா. தனது நடிப்பு திறமையின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து மேலும் பிரபலமானார்.
இது போன்ற நிலையில் இவர் நடித்து வந்த திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார் தர்ஷா குப்தா.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷா குப்தா கேரளத்து பெண் குட்டி போல் உடையணிந்து கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.