மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல டாப் நடிகரை இறுக்க கட்டியணைத்த டிடி! ஏன்? என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
பிரபல விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல முன்னணி தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சுக்கும், சிரிப்புக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உள்ளது. டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் வெள்ளித்திரையிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் டிடி பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரையுலகில் நுழைந்து 30 வருடங்கள் ஆன நிலையில், அவருக்கு வாழ்த்து கூறி அவரை இறுக்க கட்டி அணைத்தபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவர், நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, சொல்ல நினைத்த அனைத்தையும் கூறினேன். நீண்ட வருஷங்கள், ஏராளமான நினைவுகள், ஏராளமான மகிழ்ச்சி நீங்கள் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் சிறந்த வாழ்விற்கு மட்டுமே தகுதியானவர் உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக தினமும் பிரார்த்தனை செய்வேன்.
நீங்கள் சினிமா துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நேரத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட நான் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார். இந்த புகைப்படம் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.