மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அன்புள்ள அப்பா.. உங்களுக்காக என்னால் இதைக்கூட செய்ய முடியலையே! கலங்கியவாறு உருக்கமாக டிடி எழுதிய கடிதம்!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தனது திறமையாலும், கலகலப்பான பேச்சாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய மிக உருக்கமான கடிதம் ஒன்றை தனது தந்தையின் நினைவு நாளான நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் டிடி அந்த பதிவில், எனது அப்பா இந்த உலகத்தை விட்டு, எங்களை விட்டு பிரிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும் விரைவில் தந்தையர் தினமும் வரவிருப்பதால் அனைத்து தந்தையர்களுக்கும் பாராட்டாகதான் இதனை நான் வெளியிடுகிறேன். தந்தையர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களது குழந்தைகளின் முன்பு தைரியமானவர்கள் போல காட்சியளிப்பர். ஆனால் இரவில் இந்த சூழ்நிலையை எண்ணி தூக்கமில்லாமல் தவியாய் தவிப்பர்.
மேலும் இளம் தந்தையர்களுக்கு குறிப்பாக நான் கூறுவது என்னவென்றால், உங்களது மகன் மற்றும் மகளுக்கு நீங்கள்தான் முதல் ஹீரோ. ஏனெனில் ஒரு அப்பாவின் சக்தியை விட வேறு எதுவும் வலிமையானது கிடையாது. இந்த கடினமான சூழ்நிலை எப்பொழுது மாறும் என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இது கடந்து போகும் அனைவருக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் டிடி வெளியிட்ட கடிதத்தில் அவரது அப்பாவிடம், உங்களிடம் செய்துகொடுத்த சத்தியத்தின்படி தான் வாழ்வதாகவும், தான் எவ்வளவு சம்பாதித்தாலும், உங்களுக்கு ஒரு சட்டை கூட வாங்கி கொடுக்க முடியவில்லை என்பது வாழ்க்கையின் மிகப்பெரும் வருத்தமாக உள்ளது எனவும் மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார்.