மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, ட்ரெண்டிங் 1ல் டிமாண்டி காலனி 2 ட்ரைலர்.!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி.
ரூ.2 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பேய் படமான டிமாண்டி காலனி, வெளியீடுக்கு பின் மக்களிடம் கிடைத்த வரவேற்பால் ரூ.18 கோடியை கடந்து வசூல் சாதனை செய்தது.
தற்போது, அருள்நிதி, மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உட்பட பலரும் நடித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாகம் அதிரடி, திரில்லர் காட்சிகளால் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இரண்டாவது பாகத்தின் ட்ரைலர் காட்சிகளும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் டிரைலர் தற்போது வரை 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, யூடியூப் ட்ரெண்டிங் 1ல் இடம்பெற்றுள்ளது.