மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என்னைக்குமே நான் தலைவர் ஃபேன் தான்.." வாழ்த்து தெரிவித்த தனுஷ்.! வைரலான ட்வீட்.!
தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பற்றியும் அவர் இயக்கத்தில் ஏன் நடிக்க மாட்டேன் என்பதையும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். தனது மனைவிக்கு நேரடியாக வாழ்த்து கூறவில்லை என்றாலும் தொடர்ந்து என்றும் தான் ஒரு தலைவர் ஃபேன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கும் தனுஷ் தற்போதும் லால் சலாம் படத்துக்காக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுக இயக்கத்தில் நடித்ததே ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் தான்.தனது மனைவியின் இயக்குநர் ஆசையை நிறைவேற்றி வைத்தார். தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகம் செய்தனர்.பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்: பள்ளிக் கால காதல் காட்சிகளும் படத்தில் அனிருத் இசையமைத்த “ஒய்திஸ் கொலவெறி” முதல் “கண்ணழகா” உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆல்பமே சூப்பர் ஹிட் அடித்தன. ஆனால், Beautiful Mind எனும் ஹாலிவுட் படத்தின் பாதிப்பு இந்த படத்தில் இருந்த நிலையில், அது சரியாக ரசிகர்களுக்கு புரியாத விதமாக இருந்தாதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
லால் சலாம் ரிலீஸ்: கணவர் தனுஷை பிரிந்து விட்ட நிலையில், மீண்டும் பல வருடங்கள் கழித்து படம் இயக்கி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் முதலில் சின்ன கேமியோ ரோலில் கமிட்டான ரஜினிகாந்த் மகளுக்காக அதிக காட்சிகளில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.
தனுஷ் வாழ்த்து: ஏற்கனவே லால் சலாம் படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தனுஷ் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ”Lal Salaam From today !” என்கிற ட்வீட்டை போட்டு இன்று முதல் லால் சலாம் திரையரங்குகளில் வெளியாகிறது ரசிகர்கள் சென்று பாருங்கள் என பதிவிட்டுள்ளார். இன்று ஓடிடியில் வெளியாகி உள்ள தனது கேப்டன் மில்லர் படத்துக்கு கூட ட்வீட் போடாமல் லால் சலாம் படத்திற்கு தனுஷ் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.