மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இத எதிர்பார்த்து தானம்மா அப்டில்லாம் பண்ண? அடித்த லக்கால் பயங்கர குஷியில் தர்ஷா குப்தா...
மாடல் அழகி மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரிதவித்து ஏங்க வைப்பார். திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்த நடிகை தர்ஷா குப்தாவுக்கு, திரைப்பட வாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில் வெள்ளிதிரையில் களமிறங்கிய அவர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிசியுடன் ருத்ரதாண்டவம் படத்தில் இணைந்து நடித்தார். இந்த படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பெரிய வரவேற்பை பெற்றார்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் தற்போது பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அதிக படவாய்ப்புகளை பெறுவதற்காக க்ளாமரை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி வருகிறார். இதன் பயனாக தற்போது மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.