மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரொம்ப கஷ்டமா இருக்கு.! தன் அப்பாவின் உடல்நிலை எப்படியிருக்கு.! துருவ் விக்ரம் வெளியிட்ட தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். அவர் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் உடல்நலம் சரியில்லாமல் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நலம் குறித்து அவரது மகனும், நடிகருமான துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது தந்தைக்கு லேசான நெஞ்சு வலி, அசௌரிகமாக உணர்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. பரவி வரும் வதந்திகளை கேட்கும் போது மிகவும் வேதனையாக, கஷ்டமாக உள்ளது.
சீயான் நலமுடன் இருக்கிறார். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார். மேலும் இந்தப் பதிவின் மூலம் வதந்திகள் எல்லாம் களையப்பட்டு தெளிவான புரிதல் உண்டாகும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.