அடப்பாவமே.. பெயர் வைத்தவரையே கைவிட்ட இயக்குனர் பாலா..! வறுமையால் சாலையோரத்தில் இப்படியொரு தொழிலை செய்யவேண்டிய பரிதாப நிலை..!!
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து படங்களில் நடித்தவர் நடிகர் ஆனந்தன். இவர் தற்போது வறுமையின் காரணமாக சாலையோரங்களில் கண் கண்ணாடி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது தற்போதைய வாழ்க்கை நிலை குறித்து விவரித்துள்ளார்.
அதில், "எனது பெயர் ஆனந்தன். எனது ஊர் தர்மபுரி. சென்னைக்கு நான் 13 வயதில் வந்தேன். சிறுவயதில் இருந்தே நான் ரஜினி ரசிகன். இதன் காரணமாகவே தான் சென்னைக்கு வந்தேன். சென்னை வந்த புதிதில் வேலைதேடி மிகவும் கஷ்டப்பட்டேன். பின் ஒரு ஆட்டோக்காரர் தான் எனது உதவிசெய்தார். ஆரம்பத்தில் கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்து வாழ்க்கை நடத்திவந்தேன்.
பின் ரஜினியின் பணக்காரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியுடன் நடிக்க போகிறேன் என்று மிகவும் சந்தோஷத்துடன் இருந்தேன். பணக்காரன் படத்தில் டைட்டில் முடிந்த உடனே ஃபைட் சீன் வரும். அந்த சீனில் தலைவா தலைவா அடிச்சிட்டான் என்று சொல்வேன். அப்படத்தில் ரஜினி என்ட்ரி கொடுத்த ஒரு காம்பினேஷனில் நடித்திருப்பேன்.
அதேபோல் சேது படம் ஒரு சைக்கோதன்மை என்று பாலா கூறினார். ஆனால், இப்படியெல்லாம் படம் எடுக்க கூடாது. இதெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று பாலாவிடம் கூறியதுடன், நான் அந்த கதையை தெளிவாக எழுதிகொடுத்தேன். அதோடு அவருக்கு பாலா என்ற பெயரை நான்தான் வைத்தேன். எனக்கு பாலச்சந்திரன், பாரதிராஜா சார் இருவரையும் மிகவும் பிடிக்கும். இரண்டு பேரையும் சேர்த்து பாலா என்று பெயர் வைத்தேன்.
இதன் பின் சேதுபடமும் ஹிட்டானது. ஆனால் அவருடைய அலுவலகத்திற்கு நான் செல்லும்போதெல்லாம் அவர் என்னை அவாய்டு செய்துகொண்டே இருந்தார். நான் மூன்று மாதம் அவரிடம் பேச முயற்சி செய்தும், அவர் என்னிடம் பேசவில்லை. எனக்கு வாய்ப்பு கேட்டும் கொடுக்கவில்லை. இறுதியாக சூர்யாவின் ஒரு படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
ஒரு மூன்று, நான்கு நாட்கள் என்னை வைத்து சாட் எடுத்துவிட்டு, அனுப்பி விட்டார்கள். பின் என்னை அழைக்கவில்லை. அதன்பின் எனக்கு திருமணம் முடிந்ததால் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். வறுமைக் கொடுமை மிகவும் அதிகமாக இருந்ததால் தற்போது ரோட்டு கடையில் கண்ணாடி விற்று வாழ்க்கை நடத்திவருகிறேன் எனக் கூறியிருந்தார்.