பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இவர் சொல்றது புதுசா இருக்கே! வர்மா படம் வராமல் போன காரணம்! பாலா விளக்கம்!
இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகை விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த படம் வர்மா. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் தமிழ் ரீமேகத்தான் இந்த வர்மா. மேலும், விக்ரமின் மகன் துருவ் க்கு இதுமுதல் படம். இந்த படத்தினை E4 என்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்தது.
படம் வரும் காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் பைனல் காபி எங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், இந்த படத்தை இத்தோடு நிறுத்திவிட்டு விரைவில் வேறொரு இயக்குனரை வைத்து முதலில் இருந்து படமாக்கப்போவதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த செய்தி தமிழ் சினிமாவில் மிக்கபெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் பாலா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்மா படத்தை விட்டு நானாகத்தான் விளக்கினேன் என்றும், படைப்பு சுதந்திரம் கருதி இது நான் மட்டுமே எடுத்த முடிவு.
கடந்த ஜனவரி 22 ஆம் தேதியே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், மேலும் துருவ் விக்ரமின் நலன் கருதி நான் மேலும் பேச விரும்பவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் பாலா.