96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வாத்தி திரைப்பட நடிகை மீது காதல்.. இயக்குனர் பாரதிராஜா மேடையில் ப்ரபோஸ்.!
தனுஷ் நடித்து வெங்கி அட்லூரி இயக்கி இன்று வெளியாகும் திரைப்படம் வாத்தி. இப்படத்தில் சமுத்திரகனி, நாராயண ஸ்ரீநிவாஸ், ஆடுகளம் நரேன், ராஜேந்திரன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வாத்தி திரைப்படத்தின் கதாநாயகியான சம்யுக்தா தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடித்துள்ளார். தமிழில் வாத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்தநிலையில் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், சம்யுக்தா இயக்குனர் வெங்கி அட்லூரி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, நடிகர் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் வயதில் சிறியவர்களாக உள்ளனர். இல்லை என்றால் இவர்களின் கால்களில் கூட விழ தயங்க மாட்டேன். ஜிவி பிரகாஷ் கடவுளின் குழந்தை என்றும் நடிகர் தனுஷ் சிறந்த கலைஞன் மற்றும் நல்ல மனிதர் என்றும் குறிப்பிட்ட வாத்தி படத்தின் கதாநாயகி சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது. இந்த காலத்தில் பிறந்திருந்தால் அவரை காதலிக்கும் வாய்ப்பாவது கிடைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.