மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை நான் எதிர்க்கிறேன்.. இயக்குநர் மோகன் ஜியின் சர்ச்சைக்குரிய கருத்து.?
- இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் விபுல் ஷா தயாரிப்பில் திரையரங்கில் வெளிவர தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் 'தி கேரள ஸ்டோரி'. இப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இப்படத்தின் டீசரில் கேரள மாநிலத்தை சார்ந்த பெண்களை கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்யவைத்து தீவிராவாத செயலில் ஈடுபடுத்துவது போல் காட்சி அமைக்கபட்டுள்ளது. இந்த காட்சிகளுக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில் இருக்கும் முஸ்லீம் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதன்படி மதவெறுப்பை தூண்டும் இப்படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கபட்டு நிராகரிக்கபட்டது. இந்த படத்தை குறித்து இயக்குநர் மோகன் ஜி யிடம் கேட்ட போது, 'தி கேரளா ஸ்டோரி' படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.
படத்தை பார்த்த பிறகு முழுமையாக கருத்து கூறுகிறேன். ஆனால் எந்த படத்திலும் ஒரு தரப்பினர் மீது மட்டும் தவறு இருப்பதாக காட்ட கூடாது. அவ்வாறு இப்படத்தில் காட்சிகள் இருந்தால் நானும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.