சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
இரண்டாவது குழந்தைக்கு அப்பாவானார் தனுஷ் பட முக்கிய பிரபலம்! என்ன குழந்தை தெரியுமா?

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
கலைப்புலி தாணு இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் கர்ணன் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியிடுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாரி செல்வராஜுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை
உள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில் அந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.