பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இதற்காக ஆண்ட்ரியாவை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன்! பிரபல முன்னணி இயக்குனர் வெளியிட்ட தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மிஷ்கின் இயக்கத்தில், பாலா தயாரிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இப்படத்தில் நாகா, பிரயாகா மார்டின், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அருள் முருகன் இசையமைத்திருந்தார்.
திகில் கலந்த பேய் படமான பிசாசு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பிசாசு 2 படம் குறித்து பேசிய இயக்குனர் மிஷ்கின், இந்தப்படத்திலும் பிசாசுக்குதான் முக்கிய கதாபாத்திரம். பிசாசு 1 படத்தில் இருப்பது போல இதிலும் அன்பு, கருணை, பாசம், ஒரு மெசேஜ் இருக்கும். இது தவிர இரு படங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த படத்திற்காக ஆண்ட்ரியா மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். மேலும் நானும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இது ஆண்ட்ரியாவின் கேரியரில் சிறந்த படமாக அமையும் என கூறியுள்ளார்.