உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள்-மாட்டுக்கறியில் என்ன தவறு?.. நடிகை துஷாரா விஜயன் அதிரடி.!



Director P Ranjith Dushara Vijayan Speech about Beaf

இயக்குனர் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களில் நடித்துள்ள நடிகை துஷாரா விஜயன். இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே கதாபாத்திரத்தில், ரஞ்சித்தின் வசனங்களை பேசி காண்போரை கறைய வைத்துள்ளார்.

சமீபத்தில் துஷாரா விஜயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நான் நடித்ததற்கு ரஞ்சித் சாருக்கு நன்றி கூற வேண்டும். இப்படத்திற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக காத்திருந்தேன். படத்தில் பீப் இறைச்சி தொடர்பாக பேசியிருக்கிறோம். அது பொதுவான விஷயமே. 

பீப் என்பதும் ஒருவகை உணவுதான். சிக்கன் போல அதுவும் ஒருவகை உணவே. நான் அனைத்தையும் சாப்பிடுவேன். தயிர் சத்தத்தை விரும்புபவர்கள் அதனை சாப்பிடலாம். பீப் விரும்பும் நபர்கள் அதனை சாப்பிடலாம். இதைத்தான் படத்தில் கூறியுள்ளோம். அதில் சர்ச்சை ஒன்றும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.