செஞ்சியில் சாதிய தாக்குதல்கள் அதிகம் நடக்கிறது - இயக்குனர் பா. ரஞ்சித் குற்றச்சாட்டு..!



Director pa Ranjith speech abouth caste problem

திருவண்ணாமலை செஞ்சியில் அதிக சாதிய தாக்குதல் நடக்கிறது. கோவிலுக்கு செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தப்பட்டோருக்கு நீதி வழங்கியுள்ள ஆட்சியர் கவிதாவுக்கு வாழ்த்துக்கள் என இயக்குனர் பேசினார்.

சென்னையில் நடைபெற்ற நீலம் சோசியல் "மார்கழியில் மக்கள் இசை" நிகழ்ச்சியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பா. ரஞ்சித் பேசுகையில், "கோவிலுக்கு செல்வது தொடர்பாக எனக்கு பெரிய கருத்து இல்லை. நான் கோவிலுக்கு செல்வதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 

ஆனால், கோவிலுக்கு செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தப்பட்டோருக்கு நீதி வழங்கியுள்ள ஆட்சியர் கவிதாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாடு சமூக நீதி நாடு என பேசப்பட்டு வரும் வேளையில், சாதி ரீதியாக பல பிரச்சனைகள் நடக்கிறது. நமக்கு தெரிவது சிலவை என்றாலும், பெருமளவு தெரிவது இல்லை. 

Director pa ranjith

புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சி போன்று பல இடங்களில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வு தாக்குதல்கள் அதிகஅளவு நடக்கிறது. சட்டங்கள் நமக்கு உள்ளது. அரசு மாறினாலும் - மாறாவிட்டாலும் மக்களுக்கு விழிப்புணர்வு அடைய வைக்க வேண்டும். அவற்றாலேயே பிரச்சனைகள் சரி செய்யப்படும். 

தமிழ்நாட்டில் அனைத்தும் வாக்காக பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பதிலேயே பல பிரச்சனைகள் நடக்கிறது. கவிதா போன்று பல ஆட்சியர்கள் மக்களுடன் இருந்திருந்தால் என்றோ சாதிய ஏற்றத்தாழ்வு பிரச்சனைகள் சரியாகியிருக்கும். அனைவரும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்" என்று பேசினார்.