இளம் நடிகைகளின் மீது மதுவை ஊற்றிய பிரபல இயக்குனர்.! வைரலாகும் சர்ச்சை வீடியோ!!!..



director-split-beer-on-young-heroine-in-party

தெலுங்கு சினிமாவில் பல படங்களை இயக்கி பிரபல இயக்குனராக திகழ்பவர் ராம் கோபால் வர்மா. இவர் தனது செயல்களால் அடிக்கடி சர்ச்சையில் சிக்க கூடியவர். மேலும் எப்பொழுதுமே சமூகவலைத்தளங்களில் பிஸியாக ராம் கோபால் வர்மா அத்துமீறும் கருத்துக்களாலும்,செயல்களாலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

 இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் இந்த வாரம் வெளியான வெளியான ராம் போத்தினேனியின் ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அதில் ராம்கோபால் வர்மா கலந்து கொண்டுள்ளார் மேலும் அந்த பார்ட்டியில் நடிகைகள் ஷார்மி, நித்தி அகர்வால், நாபா  நடேஷ் மற்றும் பல பிரபல நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிக அளவு மது அருந்திய ராம் கோபால் வர்மா ,மது போதையில் தள்ளாடியபடி இருந்துள்ளார் மேலும் இங்கு பார்ட்டிக்கு வருகை தந்திருந்த இளம் நடிகைகள் மற்றும் அவர்களது தோழிகளின் மீது பீரை ஊற்றியுள்ளார். பின்னர் தனது தலையிலும் ஊற்றிக் கொள்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.