மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்துக்கு கதை சொல்ல முயற்சித்தேன்! ஆனால்? சமீபத்தில் பிரம்மாண்ட ஹிட் கொடுத்த இயக்குனர் பேட்டி.
தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். என்னதான் வெற்றிப்படங்களை கொடுத்தாலும் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான விஜய், அஜித், ரஜினி போன்றவர்களுடன் பணியாற்றவேண்டும் என்று அனைத்து இயக்குனர்களுக்கும் இருக்கத்தான் செய்யும்.
அந்த ஆசை இயக்குனர் வெற்றிமாறனுக்கு மட்டும் இருக்காதா என்ன? இவர் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய் ஆகியோரை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தல அஜித்தை நேரில் சந்தித்து கதை சொல்ல சில ஆண்டுகளுக்கு முன்பு முயற்சித்ததாகவும், ரஜினி, விஜய் ஆகியோருக்கு ஏற்கனவே கதை கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ள வெற்றிமாறன், சரியான நேரம் வரும் போது அவர்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.