அதிரடி இயக்குனர் ஹரி யார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தாரு தெரியுமா? அட இவர்கிட்டயா?



Do you know whos assistant of director hari

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் ஹரி. சாமி, சிங்கம், பூஜை, வேங்கை போன்ற அதிரடி திரைப்படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இந்நிலையில் சாமி இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே செம்ம வரவேற்பை பெற்றுவிட்டது. இந்த நிலையில் ஹரி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அதில் அவரிடம் நீங்கள் யாருடைய உதவி இயக்குனர் என்று கேட்க, ஹரி ‘நான் கே.பாலச்சந்தர் அவர்களிடம் பல வருடங்கள் உதவி இயக்குனராக இருந்தேன்’ என கூறினார்.

Director hari

அட இவ்வளவு பரபரப்பாக கமர்ஷியல் படங்கள் எடுக்கும் ஹரி இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் உதவி இயக்குனரா? என்று எல்லோரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.