தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மூச்சுமுட்ட ஆபாசத்தை அள்ளித்தெளித்த தொடர்கள்.. தயவுசெஞ்சு இதையெல்லாம் குடும்பத்தோடு பார்க்காதீங்க..!!
திரையரங்கில் வெளியீடு செய்யப்படும் திரைப்படங்களை தணிக்கை செய்ய தணிக்கை குழு பிரத்தியேகமாக நிர்வகிக்கப்படுகிறது. இந்த குழு படங்களில் இருக்கும் ஆபாச காட்சிகள், ஆபாச வசனம், பேசக்கூடாத வார்த்தை போன்றவற்றை நீக்கி படத்தை ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்துகிறது.
அதேபோல சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது கலவரம் போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தக்கூடிய சர்ச்சை வசனங்களும் இந்த குழுவின் பரிந்துரையின் பெயரில் நீக்கம் செய்யப்படும்.
கட்டாயம் அந்த காட்சிகள் படத்தில் இடம்பெற வேண்டும் என்றால் அந்தப் படத்திற்கு ' ஏ ' சான்றிதழ் வழங்கி அது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் எடுக்கப்பட்ட படம் என்பதை தணிக்கை குழு உறுதி செய்யும்.
இந்த நிலையில் தற்போது ஓடிடி தளங்களின் எண்ணிக்கையானது வெகுவாக அதிகரித்து வருவதால், அதில் ஆபாச காட்சிகளுக்கும் பஞ்சமில்லை என்பதைப் போல, படுக்கை அறைகாட்சி, ஆபாச வசனம், ஆபாச உடை போன்ற அனைத்து வரம்பு மீறல்களும் நடக்கின்றன.
இவை இளம் தலைமுறைக்கு முன் உதாரணமாகிவிடும் என்பதால் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதில் வெளியாகும் சென்சார் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆபாச காட்சிகள் நிறைந்து காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்த இதுவே வழி என்று பலரும் கோரிக்கை வைக்கின்றனர். சமீபத்தில் ரானா வெங்கடேஷ் உட்பட பலர் நடித்து வெளியான ராணா நாயுடு வெப்சீரிஸில் பல ஆபாச காட்சிகள் அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழில் விமல் நடித்த விலங்கு வெப்சீரிஸில் பல படுக்கை அறைகாட்சிகளும் நிறைந்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான டிரிபிள்ஸ் வெப்சீரிஸ் தொடரும் இதே மாதிரியான சர்ச்சையை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.