மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் மகனை விடாமல் துரத்தும் பெண் இயக்குனர்.! பிடி கொடுக்காத சஞ்சய்.!
தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று போன்ற திரைப்படங்களின் மூலம் இயக்குனராக புகழ் பெற்றவர் தான் சுதா கொங்காரா. இவர் மணிரத்தினம் மற்றும் பாலா ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளில் பல விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் சுதா. இந்தத் திரைப்படத்தில், அக்ஷய் குமார் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். மேலும், அபர்ணா முரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், சுதா கொங்காரா தனது கதை ஒன்றில் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இவர் சஞ்சயை கதாநாயகனாக தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சஞ்சய் தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகரை போல திரைப்பட இயக்குனராக வேண்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் பிரேமம் புகழ் அல்போன்ஸ் புத்திரன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா சென்று திரைப்படம் இயக்குவது தொடர்பாக படித்து வந்திருக்கிறார் சஞ்சய்.