ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கண்ணீருடன் வெளியேறிய நிஷாவிற்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி தனது கலகலப்பான பேச்சாலும், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத குணத்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.
மேலும் இவர் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஆரம்பமான துவக்கத்தில் கலகலக்கப்பாக இருந்த அவரிடம் நாளடைவில் மாற்றம் ஏற்பட்டதாக ரசிகர்களிடையே கருத்து எழுந்தது.
#Nisha arrival at home#biggbosstamil #Biggbosstamil4 pic.twitter.com/0nOHnIlbWL
— Imadh (@MSimath) December 13, 2020
இந்நிலையில் கடந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என அறிவிக்கபட்ட நிலையில் சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர். அவரை அவரது குடும்பத்தினர் கோலாகாலமாக கேக் வெட்டி வரவேற்றனர். மேலும் கேக்கில் வெல்கம் டூ அறந்தாங்கி என்று எழுதப்பட்டிருக்கிறது. தொடர்ந்து காரில் இருந்து நிஷா இறங்க அவருக்கு அவருடைய அம்மா ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். மேலும் பையன் பூச்செண்டு அளிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.