மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சுஷாந்த் மீது இவ்வளவு அன்பா! சிரித்த முகத்துடன் தத்ரூபமாக ரசிகர் செய்த மெழுகு சிலை! குவியும் பாராட்டுகள்!
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்தார். இந்நிலையில் சுஷாந்த் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இத்தகைய விபரீத முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுஷாந்த் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம், போதைப்பொருள் புழக்கம் ஆகியவைதான் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகரான மேற்கு வங்கத்தை சேர்ந்த சுகந்தோ ராய் என்பவர், தனது அருங்காட்சியகத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அழகான ஆளுயர மெழுகு சிலையை செய்து வைத்துள்ளார். இத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிரித்த முகத்துடன், மிகவும் தத்ரூபமாக இருக்கும் அத்தகைய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.