மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஒரு ரசிகனா..? ஊரடங்கு சமயத்திலும் நடிகையை சந்திக்க 900 கிலோ மீட்டர் பயணித்த தீவிர ரசிகர்.!
ஊரடங்கு சமயத்திலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க அவரது ரசிகர் 900 கிலோ மீட்டர் பயணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கிரிக் பார்ட்டி என்ற கன்னட சினிமாவில் நடித்ததன் மூலம் திரையிலகில் அறிமுகமாகிய நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடிகர் விஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இவர் தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்படத்தில் நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். சுல்தான் திரைப்படம் வெளியான பிறகு ராஷ்மிகாவிற்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்தநிலையில், தெலங்கானாவை சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்பவர் நடிகை ராஷ்மிகாவின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக தனது மாநிலத்தில் இருந்து ராஷ்மிகாவின் இல்லம் இருக்கும் கர்நாடகாவின் குடகு பகுதி வரை 900 கிலோ மீட்டர் பயணித்துள்ளார்.
அவர் செல்லும் வழியில் நடிகையின் வீட்டு விலாசத்தை விசாரித்தபடியே சென்றுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த சிலர் போலீசாரிடம் புகார் அளித்துனர். இதனையடுத்து அந்த நபரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் குடகு பகுதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால், அங்கு செல்ல முடியாது எனக் கூறியுள்ளனர். மேலும், ராஷ்மிகா படப்பிடிப்புக்காக மும்பை சென்றுவிட்டார் என்ற தகவலையும் அவரிடம் கூறியுள்ளனர். இதனால் அந்த ரசிகர் ஏமாற்றத்துடன் மீண்டும் அவரது சொந்த ஊருக்கே ஊர் திரும்பியுள்ளார்.