திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"இந்தப் பாடலை சித் ஶ்ரீராம் பாடக்கூடாது" மிஸ்கினிடம் சண்டை போட்ட இளையராஜா.. என்ன காரணம்.?
தமிழ் சினிமாவில் மிகப் பெரும் இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. இவர் தமிழில் 1000க்கும் மேற்பட்ட பாடல்களில் இசையமைத்து பாடியுள்ளார். 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை இவர் பாடலுக்கு என்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில் இளையராஜா மிஸ்கினுடன் சண்டை போட்ட விஷயத்தை பற்றி தற்போது மிஷ்கின் பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மிஸ்கின், இளையராஜா குறித்து கூறியதாவது, " 2020 ஆம் வருடம் மிஸ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் இசை மிகப்பெரும் அளவில் பேசப்பட்டு வந்தது.
சைக்கோ படத்தில் இடம் பெற்ற உன்ன நினைச்சு நினைச்சு எனும் பாடலுக்கு இளையராஜா பல ட்யூன்கள் போட்டும் எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. பின்பு ஒரு வழியாக டியூன் போட்டு முடித்து விட்டோம். ஆனால் அந்தப் பாடலை சித் ஸ்ரீராம் தான் பாட போகிறார் என்று கேட்டதும் கோபமாகி என் டியூனுக்கு அவர் பாடக்கூடாது. இன்னொரு பையன் பெயரை குறிப்பிட்டு அவர் தான் பாட வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் சித் ஸ்ரீராம் தான் பாட போகிறார் என்று கட்டாயமாக கூறிவிட்டேன். இவ்வாறு மிஸ்கின் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சித் ஸ்ரீ ராம் ரசிகர்கள் கோபமடைந்து வருகின்றனர்.