பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விரைவில் வெளியாகிறது வர்மா திரைப்படம்! வெளியான சுவாரசிய தகவல்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமால் பல்வேறு தேசிய விருத்துகளைம் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் மகன் துருவ் நடித்த முதல் படமான வர்மா படத்தை பாலா இயக்கியிருந்தார்.
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தைதான் பாலா தமிழில் ரீமேக் செய்தார். E4 என்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. பட பிடிப்புகள் அனைத்தும் முடிந்து அடுத்தவாரம் படம் வெளியாக இருந்த நிலையில் படம் சரியாக வரவில்லை என்று இந்த படத்தை மறுபடியும் புதிய கூட்டணியோடு தயாரிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. துருவ் மட்டும் இருக்க மற்றவர்கள் மாற்றப்படுவார்கள் என்றனர்.
இந்த நிலையில் மீண்டும் எடுக்கப்படும் இந்த வர்மா படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க இருக்கதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறித்து. எப்படியோ, படத்தின் இயக்குனர் விரைவில் ஒப்பந்தமாகி படம் வரும் ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.