மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நயன், சிம்ரன்கூட நடிக்கணும்னு ஆசை.. கமலின் வேலைக்கு ஆப்படிக்கும் ஜி.பி.முத்து..! வீடியோ வைரல்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் 6-வது சீசனிலும் அமோக வரவேற்பு பெற்றுள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது, டிக்டாக் மூலமாக பிரபலமான ஜி.பி.முத்து முதல் நபராக இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது அவர் தனக்கு தனியாக இருப்பதற்கு பயமாக இருக்கிறது என்று கமலிடம் கூறவே, அவர் ஆதாம் ஏவாள் கதையை சொல்ல, அதனை அறியாத ஜி.பி.முத்து ஆதாமா? என்று கமலையே அதிர்ச்சியாக்கினார். இந்த நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஜிபி முத்துவை ஆதாம் தெரியுமா? என்று மீண்டும் கமல் கேட்க, அவர் யாரென்று தெரியாது என்று விழித்தார்.
அத்துடன் உங்களுடன் யார் இரண்டு பேர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு சற்றும் தயங்காத ஜி.பி.முத்து நயன்தாரா மற்றும் சிம்ரனுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறுகிறார். இதனை கேட்டு கமல், "எனது வேலைக்கு நீங்கள் ஆப்பு வைக்கிறீர்கள்" என்று கலாய்க்கிறார்.
#Day7 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ek6uOyPMvc
— Vijay Television (@vijaytelevision) October 16, 2022