மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒல்லிப் பெல்லி நடிகை இலியானாதானா இது! இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாரே! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இவர் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதனை தொடர்ந்து அவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இலியானாவின் மெல்லிய இடையே அவரை பெருமளவில் பிரபலமாக்கியது. மேலும் அவர் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை காதலித்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் ஒல்லி பெல்லி நடிகையாக வலம் வந்த இலியானா தற்போது நன்கு உடல் எடை அதிகரித்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் இடுப்பழகி இலியானாவா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர்.