திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இமான் இசையமைக்கபோகும் அடுத்த திரைப்படம் எது தெரியுமா.?
1989ம் ஆண்டு "புதிய பாதை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். முன்னதாக இவர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து வருகிறார் பார்த்திபன்.
தற்போது தயாரிப்பாளராகவும் தொடர்ந்து வரும் பார்த்திபன், தனது முதல் படமான புதிய பாதை படத்திற்காக சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 1996ம் ஆண்டு பாரதி கண்ணம்மா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை வென்றுள்ளார்.
தொடர்ந்து 1999ம் ஆண்டு இவர் தயாரித்து இயக்கி, நடித்த "ஹவுஸ்புல்" படத்திற்காக சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருதையும் வென்றுள்ளார். இந்நிலையில் பார்த்திபன் தனது புது படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியுள்ளார்.
அவரது பிசி ஷெட்யூல் காரணமாக ரஹ்மான் இசையமைக்க மறுத்ததால், தற்போது அந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். அதில், இதுவரை 5 பாடல்களுக்கு இமான் இசையமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.