மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. இன்ஸ்டாவில் ஒரு பதிவுக்கு இவ்ளோ வருமானமா?... வியக்கவைக்கும் நடிகர், நடிகர்களின் வருவாய்..!
கடந்த 2010 ஆம் வருடம் புகைப்படத்தை மட்டும் பகிரும் செயலியாக அறிமுகம் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம், தற்போது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு மக்களிடையே பெரிதளவிலான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் முகநூலுக்கு அடுத்தபடியான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியின் தொடக்கத்தில் திரை பிரபலங்கள் மூலமாக அறிமுகம் செய்த நிலையில், அவர்கள் ரசிகர்களுடன் பேசவும், பழகவும், கவர்ச்சி புகைப்படத்தை பகிரவும் அதனை உபயோகம் செய்து வருகின்றனர். தங்களை பின்தொடரும் ரசிகர்கள் வாயிலாக வருமானத்திற்காக பல்வேறு விளம்பரத்தில் நடித்து, அதனை பதிவு செய்து வருகின்றனர்.
இவ்வாறாக நடிகர் அல்லது நடிகை போன்று பிரபலமாக உள்ளோர், தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் வருமானம் பெறுகின்றனர். இந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாவில் 7.3 கோடி பேர் பின்தொடருகின்றனர். இவர் ஒரு விளம்பரத்தை ஒரு முறை பதிவிட ரூ.1.8 கோடி பணம் வாங்குகிறார்.
நடிகை ஆலியா பட்டை 5.8 கோடி பின்தொடரும் நிலையில், ஒரு பதிவுக்கு ரூ.1 கோடி பணம் வாங்குகிறார். ஹிந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் என வர்ணிக்கப்படும் ஷாருக்கானை 2.7 கோடி பேர் பின்தோறும் நிலையில், விளம்பரத்தை ஒருமுறை பதிவிட ரூ.80 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் வாங்குகிறார்.
இதனைப்போல நடிகை தீபிகா படுகோன், அக்ஷய் குமார் ஆகியோரும் ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.1 கோடி பணம் வாங்குகின்றனர்.