#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிளைக் கூட விட்டு வைக்கலயா? ஏலத்தில் என்ன விலை போனது தெரியுமா?"
நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் ஆந்திராவைச் சேர்ந்த விஜயலட்சுமி. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த இவரை, "சில்க் ஸ்மிதா" என்று பெயர் மாற்றி தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனரும், நடிகருமான வினுச்சக்ரவர்த்தி.
சில ஆண்டுகள் மட்டுமே தமிழ் சினிமாவில் நடித்து மறைந்து விட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்யங்களும், மர்மங்களும் நிறைந்ததாகவே உள்ளது. பெண்களே பொறாமைப்படும் பேரழகியாக இருந்த சில்க், நடிக்க வருவதற்கு முன்பே திருமணமாகி மணமுறிவு ஏற்பட்டவர் என்று கூறப்பட்டது.
அவர் மறைந்து இரண்டு தசாப்தங்கள் கடந்த பிறகும், இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவராக சில்க் ஸ்மிதா உள்ளார். இந்நிலையில் ஒரு படப்பிடிப்பின்போது, சில்க் ஸ்மிதா ஒரு ஆப்பிளைக் கடித்து விட்டு தன் அருகில் வைத்திருந்தாராம்.
அங்கிருந்த ஒருவர், அந்த ஆப்பிளை எடுத்துச் சென்று ஏலம் விட்டிருக்கிறார். சில்க் ஸ்மிதா கடித்த அந்த ஆப்பிள் அந்த காலகட்டத்திலேயே 200 ரூபாய்க்கு ஏலம் போனதாம். இந்த சுவாரசியத் தகவல் தற்போது வெளியாகி, அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.