திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாபம் தான் காரணமா.? அதிரடி கேள்விகளால் ஜோசியக்காரர்களை கலங்கடித்த மாரிமுத்து திடீர் மரணம்.! ...
20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு இன்று நல்ல நிலைமைக்கு உயர்ந்திருப்பவர் மாரிமுத்து. கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக தன்னுடைய திரை துறை வாழ்க்கையை தொடங்கிய இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெய்லர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்த இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
இவரது வசனம் மற்றும் உடல் மொழி ஆகியவை சின்னத்திரையையும் தாண்டி சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாகின. குணசேகரன் கதாபாத்திரத்திற்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உருவானது. இந்நிலையில் இன்று காலை அந்தத் தொடருக்காக டப்பிங் பேசச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் மாரிமுத்து. இவரது மரணத்தால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் முதல் திரையுலகினர் வரை பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இவர் ஜோதிடத்திற்கு எதிராக ஆழமான மற்றும் அறிவுப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்து வாதாடியது அனைவரிடமும் வரவேற்பு பெற்றது. இவரிடம் விவாதம் செய்ய முயன்ற ஒரு ஜோசியக்காரரிடம் நான் கடவுளையே நம்ப மாட்டேன் உங்களையா நம்பப் போறேன் என அதிரடியான வசனத்தால் ஜோதிடர்களையே ஆட்டம் காண வைத்தார் மாரிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜோசியக்காரர்களின் சாபம் தான் இவருக்கு பழித்து விட்டது என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.