திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அடிச்சதுடா லக்கி ப்ரைஸ்..." தளபதி 68 ன் ஹீரோயின் இவர் தானா.? புது அப்டேட்.!
சின்னத்திரையில் தொகுப்பானியாகவும் செய்தி வாசிப்பாளராகவுமிருந்து கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியா பவானி சங்கர் . இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ருத்ரன் மற்றும் பத்து தல போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் அருள் நிதியின் டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் மேலும் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் உலாவி வருகிறது.
அந்த செய்திகளின்படி ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி விஜயின் 68வது படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெங்கட் பிரபு இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த பல கதாநாயகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. நடிகை கீர்த்தி செட்டியின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது நடிகை பிரியா பவானி சங்கரின் பெயர் அந்தப் பட்டியலில் அடிபடுவதாக பட குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.