மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'காந்தாரா 2' வில் கலக்கவரும் கவர்ச்சி புயல்.?!
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியான திரைப்படம் காந்தாரா. இந்தத் திரைப்படம் கன்னட மொழியில் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 400 கோடிக்கு மேல் இந்திய அளவில் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்தனர் பட குழுவினர். இதற்கான கதை தயார் செய்யப்பட்டு படப்பிடிப்புகள் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கப்படுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்திற்கு முந்தைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் கதை அமைப்போடு வர இருப்பதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. மேலும், இந்த திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் மலைப்பகுதிகளிலும் மழைக்காலங்களில் நடப்பது போல் இருப்பதால் படப்பிடிப்புகள் ஜூன் மாதம் முதல் துவங்கயிருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்தத் திரைப்படத்தின் முதல் பாகத்தை கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்தார். மேலும் இந்தத் திரைப்படத்தில் அவருடன் கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, சப்தமி கவுடா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது படக் குழு. மேலும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலிவுட்டின் கவர்ச்சிக்கன்னி ஊர்வசி ரவுடெல்லா நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இது தொடர்பாக ஊர்வசி படத்தின் நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷப்செட்டியுடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அத்துடன், அந்த புகைப்படத்தில் காந்தாரா 2 என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து இருந்தார். இதனால் அவர் காந்தாரா 2 திரைப்படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஊர்வசி காந்தாரா 2 வில் நடிக்க இருப்பதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாளே இந்த தகவல்களை மறுத்துள்ளது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது என்றும் உண்மைக்கு புறம்பானது எனவும் அறிக்கை விட்டுள்ளனர்.