96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
'உனக்கு வயதே ஆகாதா' ஜெயம் ரவியை பார்த்து வியந்த பிரபல தமிழ் நடிகை; யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி தற்போது தனது 24 வது படமாக பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகும் கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
Last but not the least, Excited to reveal my Thambi @actor_jayamravi ‘s #Comali9thLook , reminding OUR Ravi before Jayam Ravi 😊😍😇 Congrats Dir @Pradeeponelife|@MsKajalAggarwal| @hiphoptamizha | Prod @VelsFilmIntl |@SonyMusicSouth @shiyamjack #ComaliSingleTrack coming soon🎉 pic.twitter.com/q809687j6b
— Mohan Raja (@jayam_mohanraja) May 26, 2019
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையமாகக் கொண்டு காமெடியாக உருவாக்கப்படும் இப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் கோமாளி படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதில் இறுதிப் போஸ்டரில் ஜெயம்ரவி ஸ்கூல் பையன் போல இருக்கும் போஸ்டர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருந்தது.
What is this @actor_jayamravi ???? You are not aging at alll... You Look like a teenager all over again.. Good Luck https://t.co/aEUfly5LvE
— Genelia Deshmukh (@geneliad) May 26, 2019
இந்நிலையில், சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்திருந்த ஜெனிலியா தற்போது கோமாளி பட பள்ளி மாணவனாக ஜெயம் ரவி இருக்கும் போஸ்டரைப் பார்த்து, என்ன ஜெயம்ரவி இது. உனக்கு வயதே ஆகாதா... உன்னைப் பார்க்க பதின்ம வயது பையனைப் போலவே இருக்கு. என்று கூறி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.