பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ப்பா..என்னவொரு எனர்ஜி! மகனுடன் வேற லெவல் வீடியோவை வெளியிட்ட ஜித்தன் ரமேஷ்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஆர்.கே வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்த ஜித்தன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரமேஷ். இப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவர் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார். இவர் நடிகர் ஜீவாவின் சகோதரர் ஆவார். அதனைத் தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் 10ற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில் ஜித்தன் ரமேஷ்க்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு மிகவும் அமைதியாக, எதையும் கண்டுகொள்ளாமல் இருக்குமிடம் தெரியாமல் இருந்து வந்தார். இதனால் அவர் விமர்சனத்துக்கும் உள்ளானார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், எப்படி நம்ம குத்து என பதிவிட்ட நிலையில் பலரும் வேற லெவல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.