பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட முதல் வீடியோ! என்னவெல்லாம் கூறியுள்ளார் பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மேலும் கடந்த வாரம் ரம்யா, நிஷா, ஷிவானி, கேபில்லா, ரமேஷ், சோம் என 6 பேர் நாமினேஷனில் இடம்பெற்ற நிலையில், கமல் திடீரென இந்த வாரம் டபுள் எவிக்சன் என பேரதிர்ச்சி கொடுத்தார். அதனை தொடர்ந்து சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் மற்றும் அவரை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுகிழமை நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இதற்காக சக போட்டியாளர்களான அர்ச்சனா, ரியோ மற்றும் மற்ற போட்டியாளர்கள் கதறி அழுதனர்.
— Siva.k (@sivakubendiran) December 14, 2020
ஜித்தன் ரமேஷ் வீட்டின் உள்ளே போட்டியாளர்களிடம் பேசி விடைபெற்று செல்லவில்லை. வித்தியாசமாக கன்பெஷன் ரூமில் இருந்தவாறு நேரடியாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு முதன்முதலாக தனது வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் " பிக்பாஸ் வீடு ஒரு புது வித்தியாசமான அனுபவம் தான். 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு இல்லாமல் இவ்வளவு நாள் இருந்திருக்க முடியாது. பிக்பாஸ் வீட்டில் எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. இனி என்னுடைய படங்களுக்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.