பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னது! இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா? வெளியே கசிந்த தகவல்!
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் 50 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டுள்ளது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேகா பின் பாடகர் வேல்முருகன் அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் கடந்தவாரம் பாடகி சுசித்ரா என இதுவரை 4 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பிக்பாஸ் நாள்தோறும் வித்தியாசமான பல டாஸ்குகளை கொடுத்து வருகிறார். இதனால் மோதல்,வாக்குவாதங்களும் உருவாகி வருகிறது. இவ்வாறு பல சுவாரஸ்யங்களுடன் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம் ஆகிய ஏழு பேரும் நாமினேட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் வார இறுதியான நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற போவது யார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் குறைந்த அளவிலான வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.