மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹனிமூன் கொண்டாட்டத்தில் கணவருடன் காஜல் அகர்வால்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
தனது கணவருடன் மாலத்தீவு கடற்கரைக்கு ஹனிமூன் சென்றுள்ள நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூன் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் நடிகை காஜல் அகர்வால்.
சினிமாவில் பயங்கர பிசியாக இருக்கும் இவர் சமீபத்தில் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.
தற்போது திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் காஜல் அகர்வால். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்துவரும் இவர் தற்போது மேலும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.